×

சீரக சம்பா கறிவேப்பிலை குழம்பு சாதம்

தேவையானவை:

சீரக சம்பா அரிசி வடித்த சாதம் – 1 கப்,
புளிக் கரைசல் – 4 டேபிள் ஸ்பூன்,
நெய், உப்பு, எண்ணெய் – தேவைக்கு,
கறிவேப்பிலை – ½ கப்.வறுத்து

அரைக்க:

தனியா,
கடலைப்பருப்பு,
மிளகு,
சீரகம்,
சிவப்பு மிளகாய் வற்றல் – தலா 4 டேபிள்ஸ்பூன்.

தாளிக்க:

கடுகு,
பெருங்காயம்.

செய்முறை:

அடிகனமான வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கறிவேப்பிலையை போட்டு வதக்கி, வறுத்து அரைக்க கொடுத்த பொருட்களோடு மிக்ஸியில் போட்டு நன்கு பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம் தாளித்து அரைத்த ெபாடியை சேர்த்து, உப்பு போட்டு நன்கு கிளறவும். இதில் புளிக் கரைசலை திக்காக கரைத்து ஊற்றிக் ெகாதிக்க விட்டு, சீரக சம்பா அரிசி சாதத்தை நன்கு மசித்து இறக்கவும். இக்குழம்பு நெய் சேர்த்துப் பிசைந்து சுடச்சுட குழந்தைகளுக்கு கொடுக்கவும்.

 

The post சீரக சம்பா கறிவேப்பிலை குழம்பு சாதம் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...